உடும்புகளை பிடித்து விற்பனைக்காக வைத்திருந்த நபருக்கு சிறை: மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி!

மயிலாடுதுறை அருகே உடும்புகளை பிடித்து விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சீர்காழி வனச்சரகம் மயிலாடுதுறை பிரிவு திருமங்கலம் கிராமம் விக்ரமன் ஆறு பகுதியில் உடும்புகளை பிடித்து விற்பனைக்காக வைத்திருப்பதாக சீர்காழி வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் மயிலாடுதுறை பிரிவு வனவர் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
image
அப்போது, குத்தாலம் தாலுகா திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர் உடும்புகளை பிடித்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து இரண்டு உடும்புகள் கைப்பற்றி, அவரை 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை, சீர்காழி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்து பின்னர் நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா உத்தரவின்படி மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.