ஒரே ஆண்டில் தாய், தந்தை மரணம்! கதறி அழும் பிரபல நடிகரின் குடும்பத்தினர்


பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 80.

பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா

தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் கிருஷ்ணா, இவரது மகன் மகேஷ் பாபு.

நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கிருஷ்ணா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.

இவரது மரணம் மகேஷ்பாபு குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே ஆண்டில் தாய், தந்தை மரணம்! கதறி அழும் பிரபல நடிகரின் குடும்பத்தினர் | Mahesh Babu Father Passed Away

சோகம் நிறைந்த 2022

2022ம் ஆண்டில் மட்டும் மகேஷ்பாபுவின் அண்ணன், தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளனர், கடந்த ஜனவரி மாதத்தில் அண்ணன் ரமேஷ்பாபு உயிரிழந்தார், செப்டம்பரில் தாய் இந்திரா தேவி காலமானார்.

தற்போது தந்தை கிருஷ்ணாவும் உயிரிழந்துள்ளதால் மகேஷ்பாபுவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

ஒரே ஆண்டில் தாய், தந்தை மரணம்! கதறி அழும் பிரபல நடிகரின் குடும்பத்தினர் | Mahesh Babu Father Passed AwaySource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.