ராஞ்சி: நிலக்கரி சுரங்க குத்தகை தொடர்பான வழக்கில், வரும் நவ.,17ம் தேதி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஒரு நாள் முன்னதாக ஆஜராக சோரன் தரப்பில் கோரிக்கை அளிக்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை நிராகிரித்துள்ளது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது.இந்த மாநிலத்தில், சுரங்க குத்தகைகளை சட்டவிரோதமாக முதல்வர் ஹேமந்த் சோரன் தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேமந்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி, ஜார்கண்ட் கவர்னருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதற்கிடையில், நடந்த சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்த ஹேமந்த், அதில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் இரண்டாவது முறையாக வரும் நவ.,17ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிருந்தது.
இதையடுத்து, ஒரு நாள் முன்னதாக ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன் என ஹேமந்த் சோரன் தரப்பில், அமலாக்கத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை அமலாக்கத்துறை இன்று(நவ.,15) நிராகரித்துள்ளது. இது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரவாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement