வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தனக்கு அனுப்பப்பட்ட ‘சம்மனில்’ குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், தனக்கு வேறு பணிகள் இருப்பதால், விசாரணை தேதியை மாற்றித் தரும்படி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வைத்த கோரிக்கையை, அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது.
ஜார்கண்ட்டில், நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், 1,000 கோடி ரூபாய் வரை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு எழுந்தள்ளது.இந்த விவகாரத்தில் முதல்வரின் அரசியல் ஆலோசகர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
முதல்வரையும் விசாரணைக்கு வரும்படி அமலாக்கத்துறை அழைப்பதால், மாநிலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
ஏற்கனவே முதல் சம்மன் அனுப்பப்பட்டு ஹேமந்த் ஆஜரான நிலையில், இரண்டாவது முறையாக, வரும் 17 ம் தேதி ஆஜராகும்படி, அமலாக்கத்துறை அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அந்த தேதியில் தன்னால் வர இயலாது ஒரு நாள் முன்னதாக, அதாவது 16 ம் தேதியே விசாரணைக்கு வருவதாகவும், அதற்கு அனுமதிக்கும்படியும் கேட்டிருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள், திட்டமிட்டபடி 17 ம் தேதியே விசாரணைக்கு வரும்படி ஹேமந்த் சோரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement