பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு பேருந்தை ஜப்தி செய்த ஊழியர்கள்!

நெய்வேலி அருகே கொளப்பாக்கத்தை சேர்ந்த பச்சமுத்து என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நெய்வேலி அடுத்த அரசகுழி அருகே மாட்டு வண்டியில் சென்ற பொழுது திருச்சி கோட்டத்தை சேர்ந்த அரசு பேருந்து மாட்டு வண்டியின் மீது மோதியதில் இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. இதில் மாட்டு வண்டி முற்றிலும் சேதம் அடைந்தது மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த பச்சைமுத்து காயமடைந்துள்ளார். 

இந்த வழக்கு விருத்தாச்சலம் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பச்சமுத்துவிற்கு ஆறு லட்சத்து 47 ஆயிரத்து 717 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என திருச்சி கோட்ட அரசு பணிமனை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர். 

bus

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி போக்குவரத்து துறை அதிகாரிகள் இழப்பீடு வழங்காமல் அலை கழித்து வந்ததால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் வந்த அரசு பேருந்தை வேப்பூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு நீதிமன்ற ஊழியர்கள் திருச்சி கோட்ட பேருந்தை  ஜப்தி செய்தனர், இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர் பின்னர் அவ்வழியே வந்த வேறு பேருந்துகளில் பயணிகள் சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.