புனே: காங்.,எம்.பி ராகுல் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் எங்கள் கட்சியின் ஒற்றுமையை ஊக்குவிக்கும் என காங்., தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறினார்.
மஹாரஷ்டிரா மாநிலம் வாஷிம் நகரில் காங்., தலைவர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் மறந்து போன வீடு, வீடாக சென்று தொடர்பு கொள்ளும் நிகழ்வை, இந்திய ஒற்றுமை யாத்திரை ஊக்குவிக்கும்.
அதிகாரத்தில் இருந்தபோது, அதனை நாங்கள் மறந்து விட்டோம். அதனை, இந்த பாதயாத்திரையின் வழியே தற்போது நாங்கள் நினைவு கூர்கிறோம். காங்.,எம்.பி ராகுல் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை(பாரத் ஜோடோ யாத்திரை) எங்கள் கட்சியின் ஒற்றுமையை ஊக்குவிக்கும். மேலும் எங்கள் கட்சி இணைந்து செயல்பட பெரிதும் உதவும். இதன் பயன்கள் வரும் 2024ம் ஆண்டு பார்லி., தேர்தலில் வெளிப்படும்.

காங்., கட்சியின் பாதயாத்திரைக்கும், வாக்கு வங்கி அரசியலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இது ஓர் அரசியல் கட்சியின் பாதயாத்திரை. அரசியல் விசயங்களை உள்ளடக்கியது. ஆனால் வாக்குகளை பெறுவதற்காக அல்ல. கட்சியின் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement