பாலி: ” 21ம் நூற்றாண்டில் உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக இந்தியா உள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்தார். மோடி மேடை ஏறியதும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘மோடி, மோடி…’ என உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து அங்கு மோடி பேசியதாவது:
இந்தியாவும் இந்தோனேஷியாவும் நீண்ட கால வரலாற்றை பகிர்ந்து கொண்டுள்ளது.
பாலியில் உங்களுடன் நான் பேசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இங்கிருந்து 1,500 கி.மீ., தொலைவில் உள்ள இந்தியாவின் கட்டாக் நகரில், ‘பாலி யாத்ரா மகோத்சவ்’ நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி, இந்தியா – இந்தோனேஷியா இடையிலான ஆயிரம் ஆண்டு வணிக உறவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு நடக்கும்’பாலி ஜாத்ரா’ புகைப்படத்தை இணையத்தில் இந்தோனேஷியா மக்கள் பார்க்கும் போது மகிழ்ச்சியும், பெருமையும் அடைவார்கள். கோவிட் காரணமாக கடந்த ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டது. ஆனால், பல ஆண்டுகளுக்கு ஒடிசாவில் நடக்கும் பிரம்மாண்டமான ‘பாலி ஜாத்ரா மகோத்சவ்’ நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
வர்த்தக உறவுகளை இரு நாடுகளும் அதிகரித்து வருகிறது. வலுவான வர்த்தக உறவு உள்ளது. மிகவும் பழமையான பாரம்பரியம் மற்றும் கலாசாரம் அடிப்படையில் நாம் இணைந்துள்ளோம். இந்தோனேஷியாவிற்கு ஏராளமானவற்றை இந்தியா வழங்கி உள்ளது.
அந்நாட்டிடம் இருந்து நாம் கற்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன. பிரச்னைகளின் போது இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்துள்ளது. இரு நாடுகளும் வளர்ச்சி பாதையில் நடக்கின்றன.கடினமான நேரங்களில், இந்தோனேஷியாவிற்கு இந்தியா ஆதரவாக இருந்துள்ளது.

இந்தியாவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படும் நேரத்தில், இங்கு உள்ள ராமாயண பாரம்பரியத்தை பெருமையுடன் நினைத்து பார்க்கிறோம். இந்தியா இந்தோனேஷியா இடையிலான உறவை கொண்டாடுகிறோம்.
இன்றைய இந்தியாவின் சிந்தனையா சிறியதாக இல்லை. கணிக்க முடியாத அளவு மற்றும் வேகத்தில் இந்தியா பணிகளை செய்து வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம், ஐடி.,யில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளது. அதிவேகமாக வளரும் பொருளாதாரமாகவும் உள்ளது. 21ம் நூற்றாண்டின் உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

சுமூகமான மற்றும் கடினமான நேரங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலிமையாக இருந்துள்ளது. கடந்த2018 ல் இந்தோனேஷியா பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட போது, நாம் உடனடியாக சமுத்ரா மைதிரி நடவடிக்கையை உடனடியாக துவக்கினோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement