தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர்.
அந்த வகையில் கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து வரும் நவம்பர் 27ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், புதிய வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சாா்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பொள்ளாச்சி. இந்த கல்லூரி கோயம்புத்தூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொல்லாச்சி வட்டத்தில் அமைந்துள்ளது.