துபாய் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும், குவைத் நாட்டில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேற்காசிய நாடான குவைத்தில், கொலை உள்ளிட்ட வழக்குகளில், அந்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்கள், ஒரு பெண், சிரிய நாட்டைச் சேர்ந்த ஆண், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆண் மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக குவைத் அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், மற்றொரு மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பேர் துாக்கிலிடப்பட்டனர்.
குவைத்தில் கடைசியாக, 2017 ஜனவரி 25ல், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஏழு பேர் துாக்கிலிடப்பட்டனர்.
இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கூறிய, ‘ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பு, ‘மரண தண்டனை வாழ்வுரிமையை பறிக்கும் செயல். இதுபோன்ற கொடூர தண்டனையை நிறுத்த வேண்டும்’ என கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement