சென்னை :’டி.வி.எஸ்., எஸ்.சி.எஸ்’., நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த, குப்பை சேகரிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனமான ‘டென்னிஸ் ஈகிள்’ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது. சந்தைக்கு பின் சேவைக்கான இந்த ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டென்னிஸ் ஈகிள் நிறுவனத்துக்கு தேவையான வாகன உபகரணங்களை, தொடர்ந்து வழங்க உள்ளதாகவும் டி.வி.எஸ்., தெரிவித்துள்ளது.
நீட்டிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அது, 800 கோடி ரூபாயாக இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement