மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று (நவம்பர் 16ம் தேதி) நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் நவம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.