50 ஆண்டுக்கு முன் போட்ட விதை..! இந்தியாவின் "குட்டி ஜப்பானாக ஓசூர்" மாறிய வரலாறு

Hosur: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி, குட்டி ஜப்பான் என அழைக்கப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் இங்கு குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கப்பட்டு உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் ஓசூர்-க்கும், மாநிலத்தின் பிற மாநிலங்களை நோக்கிப் படையெடுத்து வருகிறது. குறிப்பாக உள்நாட்டுச் சந்தைக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது ஓசூரை முக்கிய டார்கெட்-ஆக மாற்றியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் முக்கியத் தொழில் நகரமாக மாற என்ன காரணம் தெரியுமா? வாருங்கள் அறிந்துக்கொள்ளுங்கள்.

50 ஆண்டுக்கு முன் போட்ட விதை:
1973 ஆம் ஆண்டு அதாவது 50 வருடங்களுக்கு முன்பு மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்த ஓசூர்-ஐ தமிழ்நாடு அரசின் சிபிகாட் வாயிலாகத் தொழிற்துறை நிறுவனங்களை ஈர்க்கவும், வர்த்தக மற்றும் உற்பத்தியை உருவாக்கவும் ராணிப்பேட்டையைச் சேர்த்து மொத்த 2 பகுதிகளைப் பெரிய அளவில் மேம்படுத்தியது.

அதன் பின்பு ஒசூர் மெல்ல மெல்ல தன்னுள் புதைத்து வைத்திருந்த வைரத்தை வெளியில் கொண்டு வர துவங்கியது. ஒசூர் தற்போது பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகளவில் உதவும் சப்ளையர்கள், அதாவது உதிரிப்பாகங்கள் மற்றும் இதர பொருட்களை உற்பத்தி செய்யும் MSME நிறுவனங்களை அதிகளவில் வைத்துள்ளது.

புதிய மற்றும் பெரு நிறுவனங்களை ஈர்க்க காரணம் என்ன?
இதைவிட முக்கியமாக ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பிற மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க ஏதுவான மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை போக்குவரத்துச் சமீபத்தில் பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. இதுதான் புதிய மற்றும் பெரு நிறுவனங்களை ஈர்க்க முக்கியக் காரணமாக உள்ளது.

இந்த வளர்ச்சியை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசின் சிப்காட் அமைப்பின் 3வது மற்றும் 4வது கட்ட வளர்ச்சி திட்டத்திற்குச் சுமார் 2,223 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதில் 1,400 ஏக்கர் நிலத்தை அரசு சில மாதங்களுக்கு முன்பே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஓசூரில் செயல்படும் பெரு நிறுவனங்கள்:
இந்நகரில் இயந்திரத்தொழில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. டிவிஎஸ் மோட்டார், அசோக் லேலண்ட், டைட்டன் நிறுவனம், இந்துஸ்தான் மோட்டர்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இந்துஸ்தன் யூனிவர்சல், கேடர்பிள்ளர், டாட்ரா வேக்ட்ரா, தநீஜா ஏரொஸ்பேஸ் & ஏவிஎசன் லிமிடெட், பாடா இந்திய லிமிடெட், ஆரொ கிரைநைட், மதுகான் கிரைநைட், ஏஃசஈடு, INEL-இந்தியா நிப்பான் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், முதலான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்குள்ளன. தமிழக அரசால் 1538.41 ஏக்கரில் தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை (சிப்காட்-1 & சிப்காட்-2) இங்கு செயல்பட்டு வருகிறது.

big companies in hosur

ஓசூரை நோக்கி படையெடுக்கும் நிறுவங்கள்:
டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதற்காகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூரில் அருகே சுமார் 4,684 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.

பாக்ஸ்கான், விஸ்திரான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய திறன்களைப் பயன்படுத்திப் பல ஆயிரம் கோடிக்கு ஒவ்வொரு வருடமும் எலக்டரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் நிலையில் இந்த இடைவெளியை நிரப்ப டாடா களமிறங்கியது.

இந்தநிலையில் ஒசூரில், இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் 60,000 பேர் பணிபுரியும் வகையில் ஐ-போன் உற்ப்பதி ஆலையை டாடா நிறுவனம் அமைக்க உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.