கோவை மாவட்டத்தில் இருக்கும் கொண்டேகவுண்டன் பாளையம் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பித்கார் மாந்தி மற்றும் மம்தா தேவி என்ற கணவன் மனைவி இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தனர்.
இவர்களுக்கு 3 மகன்களும், 3 மருமகள்களும் இருக்கின்றனர். தற்போது மம்தா தேவி கர்ப்பமாக இருந்துள்ளார். தனது கணவரிடம் வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி வரச் சொல்லி மம்தா கூறினார்.
ஆனால் கணவர் மாந்தி மளிகை பொருட்கள் வாங்காமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மம்தா ஆத்திரமடைந்து கணவரை கண்டித்தார். இதில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் மாந்தி மம்தாவை கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து மம்தாவின் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கர்ப்பிணி பெண்ணான மம்தாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.