கேரள மாநிலம் கொச்சியில், சாலையில் வேகமாக வந்து திடீரென திரும்பிய பைக்கால், நிலை தடுமாறி இருசக்கரவாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் மீது பேருந்து ஏறியதில் அவர் உயிரிழந்தார்.
திருப்பூணித்துற பகுதியில், இருசக்கர வாகனத்தில் காவ்யா என்ற பெண் சென்று கொண்டிருந்த போது, அவரை வேகமாக கடந்த பைக் ஒன்று, திடீரென சாலையின் வலதுபுறம் திரும்பியது.
இதில், பைக்கின் பின்பகுதி காவ்யாவின் ஸ்கூட்டரில் மோதிய நிலையில், நிலைதடுமாறி கீழே விழுந்த காவ்யா மீது பின்னால் வந்த பேருந்து ஏறியது.