ஒரே நாளில் 14 பில்லியன் பவுண்டுகளை இழந்த பிரபல கோடீஸ்வரர்: ஊழியர்களிடம் ஒப்புக்கொண்டதும் அம்பலம்


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கிரிப்டோ பில்லியனர் ஒருவர் ஒரே நாளில் அதிக செல்வத்தை இழந்ததற்காக உலக சாதனை படைத்துள்ளார்.

14 பில்லியன் பவுண்டுகள்

குறித்த கிரிப்டோ பில்லியனர் தனது சொத்தில் 14 பில்லியன் பவுண்டுகளை ஒரே நாளில் இழந்துள்ளார்.
கிரிப்டோ உலகின் எதிர்காலம் என கருதப்பட்டவர் 30 வயதான Sam Bankman-Fried என்பவர்.

ஒரே நாளில் 14 பில்லியன் பவுண்டுகளை இழந்த பிரபல கோடீஸ்வரர்: ஊழியர்களிடம் ஒப்புக்கொண்டதும் அம்பலம் | Crypto Billionaire Downfall Fortune In A Day

@getty

இவரது மொத்த சொத்துமதிப்பு 14 பில்லியன் பவுண்டுகள். FTX என்ற கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனத்தின் நிறுவனர் இவர்.
இந்த நிலையில், தொடர்ந்து மூன்று நாட்களில் இவரது நிறுவனத்தில் இருந்து 5.2 பில்லியன் பவுண்டுகள் தொகை வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களால் திரும்பப் பெறப்பட்டது.

இதனையடுத்து, நவம்பர் 8ம் திகதி தமது FTX நிறுவனத்தை தமது போட்டியாளரான பைனான்ஸுக்கு விற்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாக, ஆனால் அந்த பரிவர்த்தனை நிறைவேறாமல் போனது.

அதிக நம்பிக்கை மற்றும் கவனக்குறைவு

இதனால், அவரது நிறுவனத்தின் நாணயமான FTT-ன் மதிப்பு 80% வரையில் சரிவை எதிர்கொண்டது.
அத்துடன், Sam Bankman-Fried-ன் சொத்துமதிப்பும் சரிவை கண்டது. இருப்பினும், தமது இதர சேமிப்பில் 840 மில்லியன் பவுண்டுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாளில் 14 பில்லியன் பவுண்டுகளை இழந்த பிரபல கோடீஸ்வரர்: ஊழியர்களிடம் ஒப்புக்கொண்டதும் அம்பலம் | Crypto Billionaire Downfall Fortune In A Day

@getty

மேலும், முதலீட்டாளர்களின் தொகைக்கு தாம் உறுதி அளிப்பதாக கூறியுள்ள அவர், தமது நிறுவனம் அதிக நம்பிக்கை மற்றும் கவனக்குறைவுடன் செயல்பட்டதே, மொத்த இழப்புக்கும் காரணம் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன், தாம் மீண்டுவர முயற்சிப்பதாகவும், அதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.