கனடாவில் தமிழர் ஒருவர் மாயம் என தெரிவிப்பு! தற்போது அவர் குறித்து அதிகாரபூர்வ தகவல்



கனடாவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட தமிழர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவல்

இந்த தகவலை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி சிவகுமார் சிவசிதம்பரம் என்ற 44 வயதுடைய நபர் நவம்பர் 18ஆம் திகதி மாலை 4 மணியளவில் Lawrence Ave E & McCowan Rd பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

அவர் காணாமல் போன போது சாம்பல் நிறத்திலான ஸ்வெட்டர் மற்றும் கீழ் சட்டை அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.

உதவிக்கு நன்றி

இதோடு சிவகுமார் சிவசிதம்பரத்தின் உடல் எடை மற்றும் உயரம் தொடர்பிலான விபரங்களும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார், இத்தகவலை பொலிசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் உதவிக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.