பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அப்டேட்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 தமிழ் 40 நாட்களை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். ஏறத்தாழ இந்த பிக்பாஸ் சீசன் பாதி நெருங்கிவிட்டது. இதில் சண்டை சச்சரவுக்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். விக்ரமன், அசீம், தனலட்சுமி ஆகியோர் வீட்டில் நாள்தோறும் ஏதாவதொரு தகராறில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் போட்டி சென்று கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், சில ரொமான்ஸூகளும், கிரஷ்களும் அங்கங்கே வந்துபோகிறது. இப்போதைக்கு கிரஷ் சீன்கள் என்றால் ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதாவுடன் செய்யும் விளையாட்டுகள் தான். அதிலும் தற்போது அரண்மனை டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் நடந்து வருகிறது. அதில் ராபர்ட் மற்றும் ரச்சிதா ராஜா ராணியாக இருக்கிறார்கள். ராஜா ராணி நடனம் ஆடுவது என செம ஜாலியாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷனுக்கு அசீம், ஜனனி, கதிரவன், தனலட்சுமி, குயின்ஸி, ராபர்ட், ஆயிஷா மற்றும் நிவாஷினி தேர்வானார்கள். இதில் அசீம், ஜனனி முதல் இரண்டு இருக்க ராபர்ட், ஆயிஷா, நிவாஷினி 3 பேரும் இறுதியில் உள்ளார்கள். இவர்கள் 3 பேரில் இருந்து யார் வெளியேறப்போகிறார்கள் என்றால் நிவாஷினி என கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியில் யார் வைல்டு கார்டு என்டிரி தர உள்ளார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த சீசனில் ஏற்கனவே கலந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து மீண்டும் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. அத்துடன் அசல் கோலாறும் வைல்டு கார்டு என்டிரியாக செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.