Video : சிறையில் மசாஜ்… சொகுசாக வாழ்கிறாரா அமைச்சர்?; ஆம் ஆத்மி – பாஜக கடும் மோதல்

பண மோசடி வழக்கில், கடந்த மே மாதம் ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகியும், டெல்லி அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், சிறையில் உள்ள அவருக்கு அங்கு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு கட்சியினரால் பகிரப்பட்டு வந்தது. தற்போது பலரும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இதையடுத்து, ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர்  சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளனது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்துவருகிறது. இதுகுறித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளர் கௌரவ் பாட்டீயா செய்தியாளர்களிடம்,”ஆம் ஆத்மி கட்சி இப்போது ,ஸ்பா மற்றும் மசாஜ் கட்சியாகிவிட்டது. சிறையில் எதற்கு சத்யேந்திர ஜெயினுக்கு என்று சிறப்பு வசதிகள் அளிக்கப்படுகிறது என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கமளிக்க வேண்டும். 

அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது எங்கு சென்று ஒளிந்துள்ளார். சத்யேந்திர ஜெயின் ஜெயிலில் மசாஜ் பெறுவது, பலரையும் சந்திப்பது என சிறை விதிகளை காற்றில் பறக்கவிட்டு சுகபோகமாக வாழ்கிறார். இதுபோன்ற விஐபி கவனிப்புகள் ஜனநாயகத்திற்கு கேடு” என்றார்.

இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது, சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் காயம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவருக்கு மசாஜ் அளிக்கப்படுகிறதே ஒழிய, அவருக்கு என்று விஐபி வசதிகளை எதையும் அரசு செய்யவில்லை என கூறியுள்ளார்.  

அதற்கு, சிறையில் காயமேற்றப்பட்டதில் அவருக்கு முதுகுதண்டில் இரண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால், மருத்துவர்கள் மசாஜ் செய்வதை பரிந்துரைத்ததாகவும் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும், ஒரு காயமடைந்தவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பாஜக குற்றஞ்சாட்டுவது என்பது மிகவும் வேட்கக்கேடானது எனவும் குறிப்பிட்டார். 

வைரலாகி வரும் அந்த வீடியோவில், சத்யேந்திர ஜெயனின் காலுக்கு ஒருவர் மசாஜ் செய்கிறார். அவர் அங்கிருக்கும் மெத்தையில் கால் நீட்டி படுத்துள்ளது பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை தனிப்பட்ட முறையில் பரிசோதித்து அதன் உண்மைத்தன்மையை கண்டறிய முடியவில்லை. 

சில நாள்களுக்கு முன்னர்தான், சத்யேந்திர ஜெயினுக்கு சிறப்பு வசதிகள் வழங்குவதாக கு முன்னர்தான், திகார் சிறையின் கண்காணிப்பாளர் அஜித் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதே திகார் சிறையில் மற்றொரு பணமோசடி வழக்கில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், அஜித் குமார் சிறையில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, டெல்லி துணைநிலை ஆளுநர் விசாரணை அமைத்து இதுகுறித்து விசாரிக்க பரிந்துரைத்தார். 
 
சிறையில், ஆம் ஆத்மி அமைச்சருக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் கடந்த மாதம் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். அதுதொடர்பான சிசிடிவி வீடியோக்களையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். சிறைத்துறைக்கு அமைச்சராக உள்ள ஜெயின், அதை சாதகமாக பயன்படுத்தி சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.