இன்னும் 10 நாட்கள் தான்… திடீர்னு 7 பேரை கெட் அவுட் பண்ண பாஜக- என்ன நடக்கிறது குஜராத்தில்?

வரும் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். சுமார் 27 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக குஜராத் மாநிலம் திகழ்ந்து வருகிறது.

தொடர்ந்து 7வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர அக்கட்சி முனைப்பு காட்டி கொண்டிருக்கிறது. இம்முறை அதை அசைத்து பார்க்க
காங்கிரஸ்
, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாஜகவின் மாஸ்டர் மைண்ட்டாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களின் சொந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலை அவ்வளவு சாதாரணமாக விட்டு விட மாட்டார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு 7 பேர் தனியாக தேர்தலில் போட்டியிட காய்களை நகர்த்தியுள்ளனர். விஷயம் தலைமைக்கு தெரியவர அப்படியே அனைவரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளனர்.

யார் அந்த நபர்கள்? அப்படியென்ன செய்துவிட்டார்கள்? என்பதை இனி பார்க்கலாம். இவர்கள் 7 பேரும் டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்கும் முதல்கட்ட தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டியுள்ளனர். ஆனால் பாஜக சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் சுயேட்சையாகவும், காங்கிரஸ் கட்சியின் உதவியையும் நாடியுள்ளனர்.

ஹர்ஷத் வசவா. பழங்குடியின தலைவராக இவர், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ ஆவார். நந்தோட் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அரவிந்த் லடானி. முன்னாள் பாஜக எம்.எல்.ஏவான இவர், கேஷோட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.சத்திரசின் குஞ்சாரியா. சுரேந்திர நகர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான இவர், காங்கிரஸ் கட்சி சார்பில் தங்காத்ரா தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். கேதன் படேல். வல்சாத் மாவட்டத்தின் பார்தி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். பாரத் சவ்தா. ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கிராமப்புற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். உதய் ஷா. கிர் சோம்நாத் மாவட்டத்தின் வேராவால் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார். கரண் பரையா. அம்ரேலி மாவட்டத்தின் ராஜூலா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்றைய தினம் குஜராத் வருகை புரிந்த பிரதமர் மோடி, அடுத்த 3 நாட்களில் 8 தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.