கனடாவின் முக்கிய மாகாணத்தை உலுக்கிய தொடர் சம்பவங்கள்! கைதான தமிழர்… அதிரவைக்கும் பின்னணி


கனடாவில் தொடர்ச்சியாக நடந்த வாகனங்கள் திருட்டு வழக்குகளில் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேட்டர் டொராண்டோவின் அதிகரித்த வாகன திருட்டு

ஒன்றாறியோவின் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் கார் கடத்தல்களின் அதிகரிப்பு பற்றிய விசாரணைக்கு பின்னர், பொலிசார் ஒரு டஜன் பேரை கைது செய்ததோடு 100 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்திலேயே கார் கடத்தல்கள் அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதம் பொலிசார் தெரிவிக்கையில், 2017 ஆம் ஆண்டிலிருந்து வாகனத் திருட்டுகளின் எண்ணிக்கை 81 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், 2019 மற்றும் 2020 க்கு இடையில் கார் திருட்டுகள் 39 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக “operation GTA” என்ற பெயரில் பொலிசார் நடவடிக்கையை தொடங்கிய நிலையில் அது குறித்த விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ காட்சிகள் வெளியீடு

கார்கள் திருடப்படும் பாதுகாப்பு கெமரா காட்சிகள், பல சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்தல் மற்றும் திருடப்பட்ட காரின் காட்சிகள் ஆகியவை வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான 19 திருடப்பட்ட வாகனங்களையும் புலனாய்வாளர்கள் மீட்டுள்ளதாகவும், மேலும் 5 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான 50 திருடப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றின் வாகன அடையாள எண்கள் மாற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களின் விபரம்

கைது செய்யப்பட்டவர்களில் பிராம்டனைச் சேர்ந்த 21 வயதுடைய ஆயுப் அப்டியும் அடங்குவார், இவர் 6 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
ரொறன்ரோவைச் சேர்ந்த 19 வயதான லெனாக்ஸ் கிரான்ட், விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டவர்களில் வயதில் குறைவானவர் ஆவார்.

இந்த நடவடிக்கையில் கைதானவர்களில் மூத்தவர் ஆதவன் முருகேசபிள்ளை என்ற 30 வயதான நபர்.
அவர் மோசடி மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இது தொடர்பில் யாருக்கேனும் தகவல்கள் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்,

கனடாவின் முக்கிய மாகாணத்தை உலுக்கிய தொடர் சம்பவங்கள்! கைதான தமிழர்... அதிரவைக்கும் பின்னணி | Canada Police Recover Stolen Vehicles Arrest



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.