கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பிள்ளை கொத்தூர் பகுதியில் கார் ஒன்று நின்றுள்ளது. அந்தக் காரில் யாரும் இல்லாத நிலையில், போலீசார் காரை திறந்து சோதனை செய்ததில், ரூபாய். 2 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள 370 கிலோ குட்கா அண்ட் போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
மேலும் அந்தக் காரை சோதனை செய்ததில் ரூபாய் 4, 800 மதிப்புள்ள கர்நாடகா மாநில 48 மது பாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சூளகிரி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரூ.1,362 மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (38) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.