திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளனர். பக்தர்கள் ஆதார் கார்டுகளை காட்டி முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பி செல்ல கேரளா அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். கேரளா மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உடனடியாக முன்பதிவு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
