தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம் பெண் பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈ.டி.வி பாரத் தொலைக்காட்சியில் நிவேதிதா சூரஜ் (26) என்ற இளம்பெண் துணை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று தனது தோழி சோனாலி சாவ்ரே என்பவருடன் அதிகாலை 5 மணியளவில் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது பாக்யலதா பகுதியில் உள்ள ஹயாத் நகரில் அலுவலகப் பேருந்து ஏறும் இடத்திற்குச் செல்வதற்காக சாலையைக் கடந்தபோது வேகமாக வந்த கார் அவர்கள் இருவர் மீதும் மோதியது. நிவேதிதா தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது நண்பர் சோனாலி சாவ்ரே படுகாயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய கார் எங்கும் நிற்காமல் வேகமாக சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிசிடிசி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிவேதிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in