ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் சொன்ன தகவல்!

கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கான கடன் தொகைகளும் வழங்கப்பட்டன.

அப்போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “துறை அமைச்சராக பொறுப்பேற்று போட்ட முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டேன். கரூர் மாவட்டத்தில் 84 சங்கங்கள்தான் இருக்கிறது. அனைவருக்குமான ஒரு அரசு உண்டு என்றால் அது நம் அரசு தான். அனைவரின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப 3,50 லட்சம் பேருக்கு உறுப்பினராக சேர்த்து 1,200 கோடி வழங்கப்பட்டது. இப்போது 7 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, 2,000 கோடியை தாண்ட வேண்டும் என்று அடிப்படையிலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்க்க விதிகளை மாற்றம் செய்யப்பட்டு அனைத்து கட்சியினரையும் சேர்க்க உத்தரவிட்டேன். நிலமற்றவர்களும் கால்நடை வளர்ப்பு கடன் பெறலாம் என திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “தமிழகத்திலேயே அதிகமாக 1,18,000 பேர் சேலத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்கள் இருந்தன. கடந்த காலத்தில் 9200 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 10,222 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சங்கங்களுக்கு தலா 75 லட்சம் கால்நடை பராமரிப்பு திட்டத்திற்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு மட்டும் 59 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடன் 100 கோடியை தாண்டும். அந்த திட்டம் சிறப்பான திட்டம். இந்த கடன் திட்டத்தில் கரூர் முதலிடத்தில் வரும் என்றார். மாற்றுத் திறனாளிகள் கடன் வட்டி இல்லாமல் வழங்கி ஒளி ஏற்ற நம் அரசு தயாராக இருக்கிறோம். மாணவர்களும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேரலாம், அவர்களுக்கும் கடன் வழங்கப்படும். சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் கலைஞர் உருவாக்கிய திட்டமான மகளிர் சுய உதவிக்குழு திட்டம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்ற நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டது.” என்றார்.

தமிழகத்தில் உள்ள 6900 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுவதாக தெரிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “இவற்றை மாற்றி புதிதாக சொந்த கட்டிடம் கட்ட திட்டமிடப்படுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அதனால் டெபாசிட் செய்து வருகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். தொடக்க வேளாண்மை சங்கங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் லாபம் ஈட்டி கார்பஸ் பண்ட் உருவாக்கி ஓய்வூதியம் வழங்கப்படும். பொதுமக்களின் நகைக்கள் மற்றும் டெபாசிட்களை மீட்ட அரசு இந்த அரசு.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.