
பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா (24) தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்துள்ள ‘ஜியோன்கதி’ என்ற தொடர் பெங்காலி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து, கடந்த 2015ஆம் ஆண்டு இவரது கால் எலும்பில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இவருக்கு கீமோதெரபி அளிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு அந்த நோயிலிருந்து மீண்டார். கடந்த ஆண்டு இவரது நுரையீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

அதற்கும் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட நடிகை அண்மையில் குணமானார். தொடர்ந்து இரண்டு புற்றுநோயில் இருந்து மீண்ட இவருக்கு கடந்த 14ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு 2ஆவது முறையாக மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஐந்த்ரிலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
24 வயதில் இரண்டு முறை புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த இளம் நடிகை தற்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in