சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் துணை நடிகை ஒருவர் செய்த செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது, துணை நடிகையான சுனிதா போயா தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பன்னி வாஸ்-க்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அலுவலகம் முன்பு நிர்வாணமாக நின்று போராட்டம் நடத்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. தயாரிப்பாளர் பன்னி வாஸ்-க்கு எதிராக சுனிதா இதுபோன்று போராட்டம் செய்வது முதன்முறையல்ல, தயாரிப்பாளர் தன்னை ஏமாற்றிவிட்டதாக இதற்கு முன்னர் சுனிதா போராட்டம் நடத்தியுள்ளார். அதன் பிறகு அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தென்னிந்திய நடிகர்களுள் மிகவும் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுனின் நெருங்கிய நண்பர் தான் பன்னி வாஸ், அல்லு அர்ஜுனின் உதவியால் தான் இவர் தயாரிப்பாளராக ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் பல ஹிட் திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். தயாரிப்பாளரான இவர் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னோடு உடலளவில் நெருக்கமாக இருந்துவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக தயாரிப்பாளர் மீது துணை நடிகை சுனிதா போயா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தயரிப்பாளரால் தான் தனக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார், ஏற்கனவே அவர் மீது புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் சுனிதா போராட்டம் செய்துள்ளார்.
ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள தயாரிப்பாளரின் அலுவலகத்தின் முன் நின்று சுனிதா நிர்வாணமாக போராட்டம் நடத்த தொடங்கிய பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தினர். ஒரு பெண்ணானவள் தனக்கான நீதியை பெற இவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது என்று சில ஊடகங்கள் தெரிவிக்கிறது. சுனிதாவை போலவே தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டியும் இதுபோன்ற போராட்டத்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஸ்ரீரெட்டி பல திரை பிரபலங்கள் மீது அடிக்கடி குற்றம் சாட்டியும் வருகிறார்.