இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு, காயம் 300

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகினர்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் இன்று (திங்கள்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிகடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 20 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


— Øystein L.A. (@oysteinvolcano) November 21, 2022

2004-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் 9.3 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலை அடுத்து 2,20,000 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

பூகம்பம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாக உள்ளது. பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் தான் இந்தோனேசியா உள்ளது. இப்பகுதியில்தான் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகளும், தட்டுகளும் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும், மோதிக்கொள்ளும். இங்கு எரிமலை சீற்றங்களும், நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.