பாலி: இந்தோனேஷியாவில் 5.6 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். அந்த வகையில் இன்று (நவ.,21) மேற்கு ஜாவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால், மக்கள் அலறியடித்து வீதியில் ஓடினர். பலர் திறந்தவெளி மைதானங்களில் பதற்றத்துடன் கூடினர். சியாஞ்சூர் நகரில் அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement