இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்தனர்.
அங்குள்ள சியாஞ்சுர் நகரில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அளவில் 5 புள்ளி 6 பதிவான இந்த நிலநடுக்கத்தால், சில அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 300 க்கும் மேற்பட்டோரில், சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஜகார்த்தாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர்.