எடப்பாடி கோட்டையில் சம்பவம்… பாஜகவிற்கு ஸ்கெட்ச்… சீக்ரெட்டாக தட்டி தூக்கிய அதிமுக நிர்வாகி!

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் மாதக்கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் ஏங்கும் அளவிற்கு

,

இடையில் போட்டா போட்டி நிலவி வருகிறது. ஓபிஎஸ் அணியில் இருந்து நிர்வாகிகளை ஈபிஎஸ் கைப்பற்றுவது, ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் தன்வசப்படுத்துவது என அதிரி புதிரி சம்பவங்களாக அரங்கேறி வருகின்றன.

அதன்படி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் மயிலை டி.மாறன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், செய்தி தொடர்பாளருமான பொதிகை கே.பி.சாரதி, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஈ.உத்திரகுமார், திருவள்ளூர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி அணியில் நேற்று இணைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக சேலம் கிழக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் சுசீந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் சுமூகமான சூழல் இல்லை என்று சொல்லப்படுகிறது. உட்கட்சி பூசலையே சரிசெய்ய முடியவில்லை. இதில் எங்கு கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடையாமல் பார்த்துக் கொள்ள நேரமிருக்கும்? என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் கட்சிக்குள் வேற லெவல் ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சேலத்தில் மாற்று கட்சிகளை குறிவைத்து அதிமுகவிற்கு கொண்டு வர முக்கிய அசைன்மென்ட் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். இதன் தொடர்ச்சியாகவே கடந்த மாதம் பாமகவை வைத்து சம்பவம் அரங்கேறியது.

கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவை ஒட்டி ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேலம் வந்திருந்தனர். அதேநேரத்தில் அக்கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த விஷயம் பாமக தலைமைக்கு நெருக்கடியாக மாறியதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. இதேபோல் எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கும் ஸ்கெட்ச் போட்டுள்ளது தெரியவருகிறது.

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தற்போது சேலத்தில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இவ்வாறு சேலம் மாவட்டத்தில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது சம்பந்தப்பட்ட கட்சிகளை ஆட்டம் காணச் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.