கொச்சி :கேரளாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பாதுகாப்பு வாகனத்தை மறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் மணிக்குமார். இவர் கொச்சி விமான நிலையத்தில் இருந்து, தன் வீட்டுக்கு காரில் சென்றார்; பாதுகாப்பு வாகனங்களும் உடன் சென்றன.
அப்போது, மதுபோதையில் இருந்த ஒரு இளைஞர், நீதிபதி காரின் முன் சென்ற பாதுகாப்பு வாகனத்தை மறித்தார். அவரை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருடன்
சண்டையிட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த டீஜோ, 34, என தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement