
ஒடிஸாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு ரயில் நிலையத்திற்குள் விழுந்ததில் அங்கிருந்த 3 பேர் உயிரிழந்தனர்.
ஜாஜ்பூர் மாவட்டம் கோரை ரயில் நிலையம் வழியாக டோங்கோபோசிலிருந்து சத்ரபூருக்கு சென்றுக் கொண்டிருந்த ரயில் அங்குள்ள சிறிய பாலத்தில் ஏறும் போது அதன் ஒரு பெட்டி தடம் புரண்டு ரயில் நிலையத்திற்குள் விழுந்தது.
மேலும், அந்த பெட்டி ரயில் நிலையத்திற்குள்ளிருந்த காத்திருப்பு அறை, டிக்கெட் கவுன்டர் ஆகியவற்றின் மீதும் மோதி இடித்து தள்ளியது.
இதில், 3 பேர் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.