கடலூர் சிறையில் இருந்து வெளிவந்த சவுக்கு சங்கர்… மதுரை கோர்ட்டில் ஆஜர்!

நீதித்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சென்னையை சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் உச்ச நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கான ஜாமீன் நிபந்தனைகளை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதித் துறை பதிவாளர் விதிக்க உத்தரவிட்டது.

அதன்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதித்துறை பதிவாளர் வெங்கடாவரதன் ஜாமீன் நிபந்தனைகளை பிறப்பித்திருந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கையெழுத்திட இன்று ஆஜராகினார்.

முதல்வர் மீது விமர்சனம்: முன்னதாக, கடலூர் சிறையில் இருந்து இன்று கால வெளிவந்த சவக்கு சங்கர், முதல்நாளே முதல்வர் ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் விதமாக ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சியின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம், உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ பார்த்தீங்களா? எப்படி இருக்கு என்று கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவை விமர்சித்து ட்வீட் போட்டுள்ள சவுக்கு சங்கர், ‘விரைவில் புளூ சட்டை மாறனுக்கு போட்டியாக யூட்யூப் ரிவ்யூவர் அவதாரம் எடுக்கிறாரா முதல்வர்? விவாதிப்போம்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் ஆரவாரமாகியுள்ளனர். மேலும், வந்ததும் வராமல் முதல் டார்கெட்டே முதல்வரா? தலைவன் வேற லெவல் என்றும் அவரை உசுப்பேற்றியுள்ளனர்.

வந்துட்டேன்னு சொல்லு: சிறையில் இருந்து இன்று வெளியே வந்த சவுக்கு சங்கர், முதலாவதாக என்ன ட்வீட் போட போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர்.இந்க நிலையில் ”நான் வந்துட்டேன்னு சொல்லு. திரும்ப அதே மாதிரி வந்துட்டேன்னு சொல்லு” என்று பதிவிட்டு சிறையை விட்டு தான் வெளியே வரும் வீடியோவை சவுக்கு பகிர்ந்திருந்தார்.

ஏற்கனவே தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்கு திமுக தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்த சவுக்கு சங்கர், சிறையை விட்டு வெளியே வந்ததும் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.