கர்நாடக மாநிலத்தில் யானை தாக்கி பெண் பலியானதால் சடலத்துடன் கிராம மக்கள் போராட்டம்: பா.ஜ.க., எம்.எல்.ஏ., மீது தாக்குதல்

கர்நாடகா : யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் நடந்த போராட்டத்தை சமரசப்படுத்த சென்ற பா.ஜ.க., எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் ஆத்திரத்தில் அடித்து விரட்டி, சட்டையை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகே யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். பலமுறை புகார் அளித்தும் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டு. சிக்மகளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அவர்கள் பெண்ணின் சடலத்துடன் போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.

அவர்களை சமாதானப்படுத்த சென்ற பா.ஜ.க., எம்.எல்.ஏ., குமாரசாமியை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஆவேசமடைந்த அவர்கள் சட்டமன்ற உறுப்பினரை விரட்டியடித்து சட்டையை கிழித்தனர். மக்களால் தாக்கப்பட்ட எம்.எல்.ஏ-வை பாதுகாப்பாக மீட்டு போலீசார் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். கட்சி எம்.எல்.ஏ-க்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசு கர்நாடகத்தில் ஆட்சியில் இருப்பதாக கூறிய குமாரசாமி பெண்ணை தாக்கிய யானை தன்னுடையது என சிலர் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.