காஷ்மீரை விட தமிழகம் இதில் மோசம் – வேலூர் இப்ராஹிம் சாடல்!

திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜகவின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசு சிறுபான்மையினருக்காக எத்தகைய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவை பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைகிறதா? என்பது குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் பாஜக அரசு சிறுபான்மையினருக்கு செய்த திட்டங்களையும், கடந்த ஒன்றை ஆண்டு காலத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் செய்த திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக அரசு தயாரா என கேள்வி எழுப்பினர். சிறுபான்மையினருக்காக எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக அரசு ஓட்டு வங்கிக்காக பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமானதாக இருப்பதாகவும், பெட்ரோல் குண்டு, மனித வெடிகுண்டு தாக்குதல், கார் குண்டு வெடிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், 370 சட்டப்பிரிவு கொண்டு வருவதற்கு முன்பாக காஷ்மீர் எந்த அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததோ அந்த அளவுக்கு தமிழகம் தற்போது இருப்பதாகவும், 370 ஐ நீக்கிய பிறகு காஷ்மீர் தற்போது பாதுகாக்கப்பட்ட நகரமாக அனைத்து மத மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய நகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆன்மீகத்தை அதிகளவு நேசிக்கக் கூடிய மக்கள் வசிக்கக்கூடிய திருப்பூர் மாநகரில் ஆன்மிகத்தை எதிர்த்த கலைஞரின் பெயரை பழைய பேருந்து நிலையத்திற்கு சூட்டுவதற்கு பாஜக வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும், சுதந்திரத்திற்காக போராடிய தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். கூட்டுறவுத் துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்து நிதி துறை அமைச்சர் வருத்தம் தெரிவிக்கக்கூடிய நிலையில்,அவரை கிண்டல் செய்யும் வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி அளித்து வருவதாகவும், இத்தகைய அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழக முதல்வர் எப்படி திறமையான ஆட்சி நடத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசின் செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். கர்நாடகாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த உடன் அது குண்டு வெடிப்புதான் என காவல்துறை தெளிவுபடுத்தி விசாரணையை துரிதப்டுத்தியது ஆனால் தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெவ்வாறான தகவல்களை கூறி மக்களை குழப்பி வந்தன எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மற்றும் அதன் தொடர்பு 100% இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த முடியாத வகையில் தமிழக காவல்துறையும் உளவுத்துறையும் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.