வாரணாசி, நவ. 22-
பீஹார் சிறையிலிருந்து தப்பிய இரண்டு கைதிகள், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில்நடந்த ‘என்கவுன்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யின் கைத்துப்பாக்கி காணாமல் போனது. இது குறித்து போலீசார் விசாரித்தனர். அந்த துப்பாக்கியை திருடியவர், வாரணாசியில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை நோக்கி ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், இருவர் கொல்லப்பட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். அவர்களிடமிருந்து திருடப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டது.
வாரணாசி போலீசார் கூறியதாவது:
என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும், பீஹார் மாநிலம் சமஷ்டிப்பூரைச் சேர்ந்த சகோதரர்கள் ரஜ்னீஷ், மணீஷ். இவர்கள் மீது பீஹாரில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவரும் பாட்னா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன் சிறையிலிருந்து தப்பி விட்டனர்.
இந்நிலையில் வாரணாசிக்கு வந்த அவர்கள், இங்கும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது போலீஸ் துப்பாக்கி குண்டுகளுக்கு அவர்கள் பலியாகி விட்டனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement