விழுப்புரம் மாவட்டம் வேலந்தாங்கலில் அருகே மதுரா நார்சம்பட்டு கிராமத்தில் அருள் என்கிற அந்தோணி ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா (வயது 3) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அருள் தன்னுடைய உறவினர் டிராக்டரில் தனது மகள் ஐஸ்வர்யாவை உட்கார வைத்து கொண்டு நிலத்தை உழது கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக சிறுமி ஐஸ்வர்யா டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்து டிராக்டரில் உள்ள கைப்பையில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து பதறியடித்தபடி தந்தை அருள் தன்னுடைய மகளை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.