புதுடில்லி :அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் மற்றும் நிபுணர்களுடனான ஆலோசனையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று துவக்கினார்.
வரும் 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 பிப்., 1ல் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டுக்கு முன்னதாக பல்வேறு துறை ஆளுமைகள் மற்றும் நிபுணர்களை நேரில் அழைத்து, அவர்களின் துறை ரீதியிலான எதிர்பார்ப்புகள் மற்றும் ஆலோசனைகளை அமைச்சர் தெரிந்து கொள்வது வழக்கம்.
இந்த வகையில், நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று துவக்கினார். நேற்றைய கூட்டத்தில் உள்கட்டமைப்பு மற்றும்பருவநிலை மாற்றம் தொடர்பான துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் இணை அமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் கராட், நிதித்துறை செயலர் சோமநாதன், நிதி அமைச்சக மூத்த ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். சேவைத் துறை, வர்த்தக அமைப்புகள், மருத்துவம், கல்வி, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட துறை நிபுணர்களுடன், வரும் 24ல் ஆலோசனை நடத்த உள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் வரும் 28ல் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement