இந்தியாவிலேயே கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் உள்ள மாநிலம் என்றால் அது கேரளாதான். கிரிக்கெட்டில் இந்தியா விளையாடுவதால் பலருக்கு தேச உணர்வு இருக்கிறது. ஆனால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா இல்லை என்றாலும் கூட கேரள ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பார்கள்.
கேரள மாநிலம் கண்ணூரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்கள், போர்ச்சுகள் நாட்டு கொடியை சாலையோரம் வைத்திருந்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் ஒருவர் அந்த கொடியை கிழித்து போட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ இணைத்தில் வெளியானது. அவர் பாஜக ஆதரவாளர் என்று தெரிகிறது. எஸ்டிபிஐ கட்சியின் கொடி என்று நினைத்து அவர் போர்ச்சுகல் நாட்டு கொடியை கிழித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்து பிறகு ஜாமீனில் விடுவித்தனர். போர்ச்சுகல் கொடியை கிழித்த நபர் மீது கடும் கோபத்தில் இருந்த ரொனால்டோ ரசிகர்கள் பின்னர் அவரை சரமாரியாக தாக்கினர். படுகாயம் அடைந்த அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
newstm.in