பிரபல ரஸ்னா குளிர்பான நிறுவனர் காலமானார்..!!

குளிர்பானங்களுக்கு மாற்றாக மிக குறைந்த விலையில் 1970-ம் ஆண்டுகளில் ரஸ்னாவை அறிமுகப்படுத்தியவர் ஆரீஜ் பிரோஜ்ஷா காம்பாட்டா. 1980 மற்றும் 1990 ஆகிய காலகட்டங்களில் மக்களிடையே பிரபலம் அடைந்தது. ரூ.5 மதிப்புள்ள ரஸ்னாவை வாங்கி 32 கோப்பைகளாக மாற்றி கொடுக்க முடியும். இதனால், ஒரு கிளாஸ் ரஸ்னாவுக்கு 15 பைசா கொடுக்கிறோம் என்ற அளவில் விலை இருந்தது. அதன் சுவை மற்றும் தரத்திற்காக பல விருதுகளையும் ரஸ்னா பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரபல ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் ஆரீஜ் பிரோஜ்ஷா காம்பாட்டா காலமானார்.இவருக்கு நீண்டகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையில் இருந்து உள்ளார். இந்நிலையில், அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 85.

பிரோஜ்ஷாவுக்கு பெர்சிஸ் என்ற மனைவியும் பிருஜ், டெல்னா மற்றும் ருஜான் என்ற குழந்தைகளும் உள்ளனர். பினைஷா என்ற மருமகள் மற்றும் பேர குழந்தைகளும் உள்ளனர். இவரது ரஸ்னா குளிர்பானம் 60 நாடுகளில் கிளை பரப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.