மகளை சுட்டுக்கொன்ற தந்தை, உடலை சூட்கேசில் அப்புறப்படுத்த உதவிய தாய்., அம்பலமான ஆணவக்கொலை


இந்தியாவில், வேறு சாதியைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்தம் மகளை தந்தை கொலை செய்ய, தாய் அவரது உடலை சூட்கேசில் அப்புறப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 22 மகளை ஆணவக்கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சூட்கேசில் சடலம்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே கடந்த வாரம் சூட்கேஸுக்குள் 22 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மகளை சுட்டுக்கொன்ற தந்தை, உடலை சூட்கேசில் அப்புறப்படுத்த உதவிய தாய்., அம்பலமான ஆணவக்கொலை | Honor Killing Father Shot Daughter Body Suitcase

பொலிசார் சூட்கேஸை மீட்ட பிறகு, பெண்ணை அடையாளம் காண டெல்லியில் போஸ்டர்களை ஒட்டினார்கள். மேலும், தொலைபேசிகளை கண்காணித்தனர், சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தனர் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அடையாளம் காண முயற்சித்தனர்.

இறுதியில், ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாருக்கு அப்பெண்னின் உறவினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவரது தாயும் சகோதரரும் புகைப்படங்கள் மூலம் அப்பெண்ணை அடையாளம் கண்டனர்.

அவரது பெயர் ஆயுஷி சவுத்ரி (22), டெல்லியில் BCA படிப்பு படித்து வந்துள்ளார்.

பின்னர், தெற்கு டெல்லியில் உள்ள படர்பூரில் வசிக்கும் பெண்ணின் தந்தை நிதேஷ் யாதவ், உடலை அடையாளம் காணச் சென்றபோது, அவரை பொலிஸார் விசாரித்ததை அடுத்து அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு கைது செய்யப்பட்டார்.

விசாரணையில்..

விசாரணையில், நிதேஷ் யாதவ், தன் மகள் தன்னிடம் சொல்லாமல் “சில நாட்களாக வெளியே சென்றுவிட்டாள்” என்ற ஆத்திரத்தில் சுட்டுக் கொன்றதாக தெரியவந்தது.

மகள் வேறு சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாலும், அவர் அடிக்கடி இரவு வரை வெளியில் இருந்ததால் நிதேஷ் ஆத்திரமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரின் தகவல்களின்படி,

ஆயுஷி தனது குடும்பத்தினரிடம் கூறாமல் வேறு சாதியைச் சேர்ந்த சத்ரபால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கள் வார்த்தைக்கு எதிராகவும், அவரது பிடிவாதமான மனப்பான்மையுடன் நடந்தகோட்டதற்காவதும் ஆயுஷியின் பெற்றோர் கோபமடைந்தனர்.

உரிமம் பெற்ற துப்பாக்கியால் ஆயுஷியை சுட்டுக் கொன்ற பிறகு, நித்தேஷ் யாதவ் அவரது உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து மதுராவில் வீசினார். அதற்கு அவரது மனைவியும் துணை நின்றுள்ளார்.

சூட்கேஸ்

கடந்த வெள்ளிக்கிழமை மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே ஒரு பெரிய சிவப்பு நிற சூட்கேஸில் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் ஆயுஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

முகம் மற்றும் தலையில் ரத்தம் இருந்தது, உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சூட்கேஸை பார்த்த தொழிலாளர்கள், பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.