இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து, அதற்கான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த யோகேஸ்வரன் கடந்த 13.11.2022 அன்று அழகர்கோவில் சாலை கள்ளந்திரியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு வருத்த அடைந்தேன்.
யோகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, யோகேஷ்வரனின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.