மருத்துவமனையில் நடிகர் அப்பாஸ் அட்மிட்

90களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். அன்றைய இளம் பெண்களை கவர்ந்த இவர் விஐபி, காதல் தேசம், பூச்சூடவா, படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக திருட்டுப் பயலே படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்து்ளள இவர் சினிமா வாய்ப்பு இல்லாத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தினர் உடன் நியூசிலாந்தில் செட்டிலானார். அங்கு அவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்று ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அவரது காலில் அடிப்பட்டது. அதற்காக அவர் தற்போது ஆபரேஷன் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் குமணமாகி வீடு திரும்புவார் என தெரிகிறது.

இதனிடையே மருத்துவமனை போட்டோவை பகிர்ந்து, ‛‛மிகவும் பதட்டமாகிவிட்டேன். இருப்பினும் எனது பயத்தை எப்படியே கட்டுப்படுத்தி எனக்கு நானே தைரியம் வர வைத்துக் கொண்டேன். அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி. விரைவில் வீடு திரும்புவேன்'' என்கிறார் அப்பாஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.