பனாஜி: கோவா மாநிலம் பனாஜியில் பாரம்பரிய திருவிழா நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எழுத்தாளருமான சசி தரூர் பேசியதாவது.
1920, 30, 40-களில் பெண்களும் பங்கேற்ற கூட்டங்களில் அம்பேத்கர் பேசி உள்ளார். அது இப்போது ஆண் அரசியல்வாதிகளின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. நாட்டின் முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கராகத்தான் இருக்கக்கூடும். கட்டாய திருமணத்துக்கு சம்மதிக்கக் கூடாது என பெண்களை அவர் வலியுறுத்தினார்.
திருமணத்தையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 90 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் உரிமைக்காக அம்பேத்கர் குரல் கொடுத்துள்ளார். அம்பேத்கரை தலித் தலைவராக பார்க்கும் மனோபாவம் உள்ளது. நாட்டின் முதன்மையான தலித் தலைவராக அவர் விளங்கினார். தனது 20-வது வயதிலேயே செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.