இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2022 நவம்பர்21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2022 நவம்பர்21ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாககாணப்படுகின்ற தாழமுக்கமானது வடஅகலாங்கு11.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 540 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது. அதுபடிப்படியாக வலுவிழந்து வடமேற்குதிசையில் நகரக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது. அடுத்த 24 மணித்தியாலங்களில் அதுபெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்காற்றுவீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் தென் கரையோரப்பிரதேசங்களிலும் வடக்குமாகாணத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.