யாழ்ப்பாணப்
பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள்
நிறைவடைந்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி
பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
மாவீரர் தினம்
பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள்
நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள்
நிறைவடைந்துள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும்
மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகவுள்ளது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம்
செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம்
அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.