நியூடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 11 பேரை பாரதிய ஜனதா கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த 11 எம்.எல்.ஏக்களும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர், மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் இந்த எம்.எல்.ஏக்களினால் கட்சிக்கு பாதகம் வரும் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சி திடீரென முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
Delhi BJP suspends 11 rebel candidates from the party for 6 years pic.twitter.com/7zsKKI8iMa
— ANI (@ANI) November 21, 2022
முன்னதாக, சேதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கிளர்ச்சியாளர்களை சமாதானப்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. பெரும்பாலான கிளர்ச்சியாளர்கள் தங்கள் வார்டுகளில் பலவீனமான அல்லது வெளியூர் வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி)க்கான தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ஆம் தேதியும் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று கட்சித் தலைமை அதிரடி முடிவெடுத்து உள்ளது.
டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் பிஜேபி பெரும்பான்மை உறுப்பினர்களுடன் கோலோச்சி வருகிறது. 2012 இல் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாநகராட்சிகளாக மூன்றாகப் பிரிக்கப்பட்டது முதல் மூன்று முறை தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது..
தெற்கு டெல்லி, மெஹ்ராலி பகுதியைச் சேர்ந்த பாஜகவின் முன்னாள் நகராட்சி கவுன்சிலரான சதேந்திர சவுத்ரி, கிளர்ச்சியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவரைப் போலவே எஞ்சியுள்ள 10 எம்.எல்.ஏக்களும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் களம், எப்படி கலவரம் ஆகப் போகிறதோ என்று உச்சகட்ட பரபரப்பு, டெல்லி உட்கட்சித் தேர்தல்களில் வந்துவிட்டது.