கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து: அர்ஜென்டினா அணியை மொத்தமாக புரட்டிப்போட்ட சவுதி அரேபியா

கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியில் ஜாம்பவான் அர்ஜென்டினா அணியை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது சவுதி அரேபியா அணி.

மெஸ்ஸி கோல் அடித்து அசத்தல்

தொடர்ந்து 36 ஆட்டங்கள் வெற்றிவாகை சூடிய அர்ஜென்டினா அணி எவரும் எதிர்பார்க்காதவகையில் சவுதி அரேபியாவிடம் சரணடைந்துள்ளது.
ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து: அர்ஜென்டினா அணியை மொத்தமாக புரட்டிப்போட்ட சவுதி அரேபியா | Messi Flops Huge World Cup Shock

@AP

ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடியும் கோல் வாய்ப்பு அமையவில்லை.

சவுதி அரேபியா அதிரடி

இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து: அர்ஜென்டினா அணியை மொத்தமாக புரட்டிப்போட்ட சவுதி அரேபியா | Messi Flops Huge World Cup Shock

@getty

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா அணியின் எதிர்பாராத தோல்வி அந்த அணியின் மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து: அர்ஜென்டினா அணியை மொத்தமாக புரட்டிப்போட்ட சவுதி அரேபியா | Messi Flops Huge World Cup Shock

@PA

கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து: அர்ஜென்டினா அணியை மொத்தமாக புரட்டிப்போட்ட சவுதி அரேபியா | Messi Flops Huge World Cup Shock

@getty

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.