வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :’தேர்தல் நன்கொடை பத்திர விற்பனைக்கு எதிராக காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனுக்கள், அடுத்த மாதம் 6ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகள் ரொக்கமாக வழங்கப்படுவதற்கு மாற்றாக, தேர்தல் நன்கொடை பத்திர விற்பனையை மத்திய அரசு 2018ல் நடைமுறைபடுத்தியது.
இந்திய குடியுரிமை உள்ள தனி நபர் அல்லது இங்கு பதிவு பெற்ற அமைப்புகள் நன்கொடை பத்திரங்களை வாங்க தகுதி பெறுகின்றனர்.
![]() |
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் குறைந்தபட்சமாக ஒரு சதவீத ஓட்டுகள் பெற்ற கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற முடியும்.
இந்நிலையில், தேர்தல் நன்கொடை பத்திர திட்டத்தின் விதிகளில் சில மாற்றங்களை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கும் ஆண்டுகளில், தேர்தல் நன்கொடை பத்திர விற்பனையை கூடுதலாக 15 நாட்கள் நீட்டிக்க திருத்தம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து காங்.,கை சேர்ந்த ஜெயா தாக்குர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை தவிர, தேர்தல் பத்திர விற்பனைக்கு எதிராக ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்கனவே பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுக்கள் அனைத்தும் அடுத்த மாதம் 6ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாக, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement