டீ பாக்கியை தராத பா.ஜனதா எம்.எல்.ஏ… நடுரோட்டில் காரை மறித்த டீ வியாபாரி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு பாஜக முக்கிய தலைவர்கள் தங்கள் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதைய எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பாஜகவை சேர்ந்த கரண் சிங் வர்மா தனது தொகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது செஹோர் மாவட்டத்தில் உள்ள இச்சாவார் பகுதியில் அவர் காரை மறித்த டீ கடை உரிமையாளர் ஒருவர் வாக்குவத்தில் ஈடுபட்டார்.

அதாவது முன்னர் டீ கடைக்காரரின் கடையில் டீ குடித்த கரண் சிங் வர்மா மற்றும் அவரோடு வந்த கட்சியினர் குடித்த டீக்கு காசு கொடுக்காமல் பிறகு கொடுப்பதாக கூறி உள்ளார்.இது ஒரு வழக்கமாக வைத்துள்ளார்.இதனால் பாக்கி 30 ஆயிரம் ரூபாயை தரவேண்டும் என முன்னாள் அமைச்சரிடம் டீ கடைக்காரர் வாக்குவாதம் செய்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், பலரும் எம்.எல்.ஏ கரண் சர்மாவை விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோவில் 2018 சட்டசபை தேர்தல் சமயத்தில் டீ சப்ளை செய்தவருக்கு இன்னும் பணம் தரவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டுவதும் அதை முன்னாள் அமைச்சர் மறுக்காமல் இருந்ததும் தெளிவாக பதிவாகியுள்ளது.

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சம்பவம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.